உச்சக்கட்ட போர்ப் பதற்றம் – மூன்றாம் உலக போர் நிச்சயம்; உலக நாடுகளை அலறவிட்டுள்ள ரஷ்யா!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன்  இணைத்து கொண்டதாக அதிபர் புடின் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொண்டால், மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் எச்சரித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியின் அறிவிப்பிற்கு ரஷ்யா பதிலடி

உச்சக்கட்ட போர்ப் பதற்றம் - மூன்றாம் உலக போர் நிச்சயம்; உலக நாடுகளை அலறவிட்டுள்ள ரஷ்யா! | World War Three Warning Russia Join Ukraine Nato

அதேவேளை உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணைத்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி , மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் உறுப்பினர் ஆவதற்கான முயற்சியை அறிவித்தார்.

மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவுடன் இணைவதற்கான எண்ணத்தை உக்ரைன் முதல்முறையாக வெளிப்படுத்திய போதே ரஷ்யாவின் போர் தாக்குதல் கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கியது.

இந்நிலையில் உக்ரைனை நேட்டோவில் அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் இன்று காலை அந்நாட்டு மாநில டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்

.

மூன்றாம் உலக போர்

உச்சக்கட்ட போர்ப் பதற்றம் - மூன்றாம் உலக போர் நிச்சயம்; உலக நாடுகளை அலறவிட்டுள்ள ரஷ்யா! | World War Three Warning Russia Join Ukraine Nato

அத்துடன் இத்தகைய நடவடிக்கையானது மூன்றாம் உலகப் போருக்கு உத்திரவாதமாக விரிவடைவதை குறிக்கும் என்பதை உக்ரைன் நன்கு அறிவார்கள் எனவும் வெனெடிக்டோவ் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

மேலும் உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் மேற்குலகம் ரஷ்யாவுடன் நேரடியாக எதிர்க்கும் என்ற ரஷ்ய கருத்தையும் வெனெடிக்டோவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.