ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் தாக்குதல்களை ரஷ்யா குறைத்தது. இதற்கிடையே ரஷ்யாவின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா ஆவேச தாக்குதலில் ஈடுபட்டது.

வெடி மருந்து கிடங்கு

ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் | Ukraine Bombed Ammunition Depot In Russia Border

உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. நேற்று உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.