இந்த வாரம் ஜிபி முத்து தான் சூப்பர் மேன் இப்படியா சம்பவம் .!.!
விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும் கலகலப்பாக இருந்தார். முன்னதாக முதல் போட்டியாளராக GP முத்து களமிறங்கி இருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் கேமரா முன்பு சென்று அவர் பேசினார். தொடர்ந்து, கமலிடம் உரையாடிய GP முத்து, தனியாக வீட்டிற்குள் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், மற்றவர்களுடன் சேர்ந்து உள்ளே வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இதுவும் போட்டியின் ஒரு பகுதி என கூறிய கமல், அடுத்த நபர் காலை 4 மணிக்கு தான் உள்ளே வருவார் என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டதும் பதறிய ஜிபி முத்து, 4 மணி என்றால் மூச்சே போய்விடும் என்றும், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என பயத்திலேயே குறிப்பிட்டார். இதன் பின்னர், வேண்டுமென்றே கமலும் அதிகம் பயமுறுத்த கதிகலங்கி போனார் ஜிபி முத்து.
இப்படி வெகுளியான வெள்ளந்தியான ஜிபி முத்து, தனலட்சுமி தன்னை நடிப்பதாக சொன்னதாக சொல்லி ஜிபி முத்து அழக்கூடிய காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த முறை ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் இந்த வாரத்தின் பெஸ்ட் பெர்ஃபார்மர்களாக சக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜிபி முத்து, எல்லாவற்றையும் ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் கலகலப்பாக பழகியதுடன், எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் செய்ததும், வீட்டின் மீது அக்கறையுடன் இருந்ததும் அவர் பெஸ்ட் பெர்ஃபார்மர் ஆக காரணம் என சக போட்டியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை