கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர்.

மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் இதனை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பொருளாதார மந்தநிலை

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி! | High Inflation Recession Risk Will Affect Canada

இதுவரை, கனடா மிதமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் எனக் கூறி வந்துள்ள இவர்கள், தற்போது வட்டி விகிதங்கள் கனடாவில் நான்கு சதவீதமாகவும், அமெரிக்காவில் 4.5 முதல் 4.75 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், முதல் காலாண்டிலேயே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அவர்கள சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலாத்துறை சரிவு

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி! | High Inflation Recession Risk Will Affect Canada

 

முதலில் உற்பத்தித் துறை பாதிக்கப்படும் எனவும், தொடர்ந்து சுற்றுலாத்துறை சரிவை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, விலைவாசி உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் காரணமாக மக்களின் சராசரி வாங்கும் திறன் 3,000 டொலர் என குறையும் எனவும் எச்சரித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.