குளிக்க சென்ற மருத்துவருக்கு நேர்ந்த கதி
மகியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மகியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று (14) குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பற்றி மகியங்கனை மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கரவனெல்ல மருத்துவமனையில் சேவையாற்றி வந்த 31 வயதான கம்பஹா திவுலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை