அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கூரையில் இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடல்களின் எண்ணிக்கை
குறித்த மருத்துவமனையின் கூரையில் கட்டப்பட்ட அறையில் நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், உடல்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு அரசாங்க அதிகாரியாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
பஞ்சாப் முதலமைச்சரின் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார், நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் மேற்கூரையில் அழுகிய உடல்களைப் பற்றி ஒரு அனாமதேய நபர் தனக்குத் தகவல் கொடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னை அணுகி, நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால், பிணவறைக்குச் சென்று பாருங்கள், என்று கூறினார்.
ஜமான் குஜ்ஜாரின் செயற்பாடு
நான் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை என்றார். இதற்கு, நீங்கள் இப்போது திறக்கவில்லை என்றால், நான் உங்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப் போகிறேன் என எச்சரித்தேன்.
பிணவறையை இறுதியாகத் திறந்தபோது, குறைந்தது 200 உடல்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் சிதைந்த உடல்கள் அனைத்தும் வெறுமையாக இருந்தன. பெண்களின் உடல்கள் கூட மறைக்கப்படவில்லை.
குஜ்ஜார் மருத்துவர்களிடம் என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு கேட்டபோது, இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினார்கள்.
கருத்துக்களேதுமில்லை