நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! வேதனையில் பெரிய மாமனார் உடைத்த உண்மை

நயன்தாரா – விக்னேஷ் சிவன் அண்மையில் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்த நிலையில் வெளியே தலைகாட்ட முடியவில்லை என நயன்தாராவின் பெரிய மாமனார் தெரிவித்துள்ளார்.

திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று அவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தனர்.

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! வேதனையில் பெரிய மாமனார் உடைத்த உண்மை | Nayanthara Twins Baby Issue Father In Law Agony

 

இரட்டை குழந்தை – கொந்தளிக்கும் பெரிய மாமனார்

திருமணமாகி நான்கு மாதங்களே ஆனநிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தானும், நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டதாகவும், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதால் கோபமில்லை. ஆனால், அவர்கள் திருமணத்திற்கு பின் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பகிர்வது எனக்கு பிடிக்கவில்லை. கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் அந்தரங்கத்தை இவ்வாறு பகிர்வது நல்லதில்லை.

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! வேதனையில் பெரிய மாமனார் உடைத்த உண்மை | Nayanthara Twins Baby Issue Father In Law Agony

தாய்மை அடைவது என்பது எவ்ளோ பெரிய விஷயம். ஆனால் கல்யாணமாகி 4 மாதத்தில் குழந்தை பிறந்தது என கூறுகிறார்கள். என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

பார்ப்பவர்கள் ஏதேதோ கேட்கிறார்கள். கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும், சட்டப்படி எப்படி வாழ வேண்டும் என்ற வரையறை உள்ளது. பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.