வெளிநாட்டிலிலுந்து வருபவர்களால் இலங்கைக்கு இத்தனை மில்லியன் பேரிழப்பா!! -வெளியான எச்சரிக்கை…

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் தங்களுடைய உடலில் தங்க நகைகளை அணிந்து கொண்டு வரும்போது மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை நாடு இழக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கை

 

எனவே குறிப்பிட்ட வரம்பை மீறி தங்க நகைகளை அணிந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றார்.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளினால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.