“வாவ்.. நீங்க Married-ஆ? பொண்ணுனுல நெனைச்சேன்” – ரச்சிதாவை புடவையில் பார்த்து அசந்த அசல்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

இதில் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பயணத்தை தொடங்கியவர். பின்னர் விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழின் சில சீரியல்களிலும் நடித்தவர், அதன் பின்னர் கன்னட திரைப்படம் உட்பட, சில திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது தமது அடுத்த கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்.

பிக்பாஸில் முதல் டாஸ்காக கிளப் ஹவுஸ் எனும் டாஸ்க் போய்க்கொண்டிருந்தது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து இருந்தனர். இதன் காரணமாக ஒவ்வொரு கிளப் ஹவுஸ் குழுவினருக்கும் ஒரு யூனிபார்ம் ஆடை வழங்கப்பட்டது. இந்த ஆடையில்தான் அவர்கள் இவ்வளவு நாள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த டாஸ்க் முடிவுக்கு வந்ததை அடுத்து, அனைவரும் அவரவருக்கு பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

இதனை அடுத்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனக்கு பிடித்த மாதிரி ஒரு புடவை கட்டிக் கொண்டு அழகாக வந்திருந்தார். அவரை பார்த்த அசல் கோலார், “அட.. உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா..? இவ்வளவு நாள் நான் உங்கள பொண்ணு என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று வாயை பிளந்து விடுகிறார். அப்போது செல்லமாக ரச்சிதாவும் அவருக்கு இரண்டு அடி போடுகிறார். தொடர்ந்து ரச்சிதாவின் கணவர் குறித்து அசல் கேட்கும் பொழுது, இடைமறித்த விஜே மகேஸ்வரி, கணவர் பற்றியெல்லாம் கேட்காதே.. அது அவருடைய பர்சனல்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.