ராஜபக்சக்களை அகற்ற 2 இலட்சத்துக்கு குறைவானவர்களே கலந்து கொண்டனர்- சாகர காரியவசம் எம்.பி

புலனாய்வுத் தகவல்களின்படி, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதற்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மொட்டு கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். “சில வாரங்களுக்கு முன்புதான் புலனாய்வுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தினார். உளவுத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்துக்கு குறைவாகவே இருந்துள்ளது. இதற்கு பயந்து ஒரு அடி பின்வாங்கினோம். பயந்தவர்கள் சுயாதீனமாக சென்றனர். “சுயாதீனமாக சென்றதற்கு பின்னால் பயம் அல்ல, சதி இருந்தது, என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.