உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிறிலங்கா..! 164 ஓட்டங்கள் இலக்கு
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியானது இன்று 9.00 மணியளவில் ஆரம்பமானது.
நாணய சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது.
துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்குகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று (16) அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
முதல் சுற்றில் இலங்கை அணி ஏ பிரிவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், இன்றைய போட்டியில் இலங்கை – நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி முற்பகல் 9. 30 மணியளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமை
அவுஸ்திரேலியாவின் கீலோங்கில் (Geelong) உள்ள சீமன்ட்ஸ் மைதானத்தில் T20 உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவதோடு நமீபிய அணிக்கு ஜெராட் எரஸ்மஸ் தலைமை தங்கவுள்ளார்.
16 நாடுகள் இந்த வருட சுற்றுப்போட்டியில் இணையவுள்ளதுடன், இலங்கை உட்பட 08 நாடுகள் இன்று முதல் சுற்றுப் போட்டிகளுக்காக நேருக்கு நேர் மோதவுள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதற்கு முன்னதாக ஒரேயொரு இருபதுக்கு இருப்பது போட்டியில் விளையாடியுள்ளதோடு, அதில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை