கோதுமை மா ஏற்றுமதிக்கு தடை..! இந்திய அரசாங்கம் அதிரடி
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா நேற்று முதல் தடை விதித்துள்ளது.
அத்துடன், இது தற்காலிக தடை மாத்திரமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை
உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
கருத்துக்களேதுமில்லை