ரஷ்ய இராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் – 11 பேர் பலி ….
உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஸ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஸ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சோவியத் தன்னார்வல வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம்
உக்ரைன் போரில் பங்கேற்க 3 இலட்சம் ரஸ்யர்களை அணி திரட்டுமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது
கருத்துக்களேதுமில்லை