எல்லையில் பதற்றம் – பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய படை
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைஅவதானித்த ரோந்தில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில், நேற்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவம்
இது 12 கிலோ எடை கொண்டது. துப்பாக்கிச் சூட்டில் எட்டு இறக்கைகளில் 2 இறக்கைகள் சேதமடைந்தன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இது என பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை