ஜி.பி முத்துவுக்கு உடல் நலக்குறைவு…வீட்டை விட்டு வெளியேறுகிறாரா?
ஜி.பிமுத்து கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முந்தைய 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில்,நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் சிரித்து பேசி வந்த ஜிபி முத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், ஷோபாவில் படுத்து இருக்கிறார். இவருக்கு ரச்சிதா மாத்திரை கொடுத்து இங்கேயே தூங்குங்க ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க என்று கூறுகிறார். தற்பொழுது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் சக போட்டியாளர்களுக்கும் காய்ச்சல் பரவக்கூடும் என்பதால் இவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
கருத்துக்களேதுமில்லை