டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்…

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை

இலங்கையில் அண்மைக் காலமாக வடக்கு கடல் பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளின் வருகைக்கு எதிராக அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கையின் பிரபல சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்கு மற்றும் சில சட்டத்தரணிகளால் ”ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடியர்கள் அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்படை , பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் | Writ Petition Filed Against Douglas Devananda

 

அண்மைக்காலமாக அத்து மீறிய இந்திய ரோலர்களின் வருகையினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்ற நிலையில்,

சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்பதற்காக குறித்த நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடியர்கள் அமைப்பினால் இலங்கையில் உள்ள பிரபல சட்டத்தரணிகளை வைத்து இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இலங்கை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகவே குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்படை அதிகாரி, கடற்படை உயர்மட்டக் குழு எனப் பலரது பெயர்கள் முன்வைக்கப்பட்டு குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியான ஒரு அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.