ரஷ்யாவின் போர் விமானம் விழுந்து நொருங்கியது – பற்றியெரியும் மக்கள் குடியிருப்பு
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 3 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் விமானம் விழுந்ததால் குறித்த குடியிருப்பு தீப்பற்றி எரிவதுடன் அவசர கால உதவி சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.
இயந்திரத்தில் பற்றிய தீ
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், Su-34 ரக போர் விமானம், பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது, அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளது.
விபத்திற்கு முன் விமானத்தில் இருந்த விமானிகள் வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்ட விமானிகள்
“விமானத்தில் இருந்து வெளியேறிய விமானிகளின் அறிக்கையின்படி, விமானம் புறப்படும் போது என்ஜின் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம்” என்று தெரிவித்துள்ளனர்.
“Su-34 விமானம் கீழே விழுந்த இடத்தில், குடியிருப்பு வளாகத்தின் முற்றத்தில், விமானத்தின் எரிபொருள் விநியோகத்தில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.”
கருத்துக்களேதுமில்லை