அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் சுகாதார அமைச்சிற்கு வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வைத்திய உபகரணங்களை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்ளுக்கு தேவையான வைத்திய உபகரணங்கள் அதில் அடங்குகின்றன.
இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கருத்துரைத்த அமைச்சர், நாட்டு மக்களின் போசாக்கை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை