இரத்த வெறியோடு வீதியில் நடந்த ஜோம்பிகள்
சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற Zombie Walk’ அண்மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்தவெறி கொண்ட ஜோம்பிஸ் போல் உடை அணிந்து வீதிகளில் இறங்கி நடக்கும் வித்தியாசமான நிகழ்வு இதுவாகும் .
ஜோம்பி நடை எனப்படும் இந்நிகழ்வு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி உலக சாதனையை அமைப்பது அல்லது தொண்டு நிறுவனத்தை ஊக்குவிப்பது போன்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஒப்பனை ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது .
வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் கொவிட்-19 காரணமாக சாண்டியாகோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்வு இடைநிறுத்தப் பட்டிருந்தது .
இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை