சம்பளமே வாங்காமல் வேலை செய்யும் இசையமைப்பாளர் அனிருத்.. பலருக்கும் தெரியாத ஷாக்கிங் தகவல்
அனிருத்
3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என கடந்த 10 ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களில் இசையில் உருவான பாடல்களை பாடியும் இருக்கிறார்.
ஏ.ஆர். ரஹமான், யுவன், டி. இமான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பல பாடல்களை பாடியுள்ளார்.
சம்பளமே வாங்குவதில்லை
இந்நிலையில், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அனிருத் சம்பளமே வாங்கியது இல்லையாம்.
இசை மேல் தனக்கு இருக்கும் காதல் காரணமாக அனிருத் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும்போது சம்பளம் வாங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை