பெண் ஒருவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நாய் – வியப்பில் பொலிஸார்
கண்டியில் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை நாய் ஒன்று உரிமையாளரை தேடி சென்று கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐயாயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையுடன் பை ஒன்றை பெண் ஒருவர் தொலைத்துள்ளார்.
எனினும் அந்த பையின் உரிமையாளர் வீட்டிற்கு வந்த பின்னரும் பை தொடர்பில் தேடாமல் இருந்துள்ளார்.
நாயின் செயல்
இந்நிலையில் இரவு 9 மணியளவில் நாய் ஒன்று வாயில் பையை கவ்விய நிலையில் வீட்டு வாசலில் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ந்த போது அது அவர்களின் பை எனவும் இந்த நாய் எப்படி வீட்டை கண்டுபிடித்து வந்ததென்பது அந்த பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
பையை கொண்டு வந்த நாய் அங்கிருந்த செருப்புகளை கடித்த போதிலும் பையில் ஒரு இடத்தையேனும் கடிக்கவில்லை என வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாய் யாருடையதென தேடுவதற்கு வீட்டு உரிமையாளர்கள் முயற்சித்த நிலையில் பொலிஸ் நிலையத்திலும் அறிவித்துள்ளனர்.
இறுதியில் நாயின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நாயை கொண்டு செல்வதற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை