கதை சொல்லும் TASK-ஐ நெனச்சு கண்கலங்கிய ஜனனி.. தன்னோட ஸ்டைலில் கலகலப்பூட்டிய GP முத்து..!
கதை சொல்லும் போட்டியில் மனம் உடைந்த ஜனனிக்கு GP முத்து தனது ஸ்டைலில் ஆறுதல் கூறியிருக்கிறார்.
கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு போட்டிகள், வேடிக்கையான விவாதங்கள் என விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கதை சொல்லும் போட்டி பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்லவேண்டும். அப்போது சக போட்டியாளர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பஸ்ஸரை அழுத்தலாம்.
வெளியே வைக்கப்பட்ட 3 பஸ்ஸரும் அழுத்தப்பட்டால், கதை சொல்பவர் தங்களது கதையினை நிறுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில் ஜனனி கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது ஆயிஷா, தனலெட்சுமி மற்றும் விக்ரமன் ஆகியோர் பஸ்ஸரை அழுத்த, ஜனனி வெளியே வருகிறார். இதனால் சோகமடைந்த ஜனனி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு இருக்கும்போது GP முத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
அப்போது பேசிய முத்து,”இது ஒரு கேம் அவ்வளவுதான். அடுத்து நான் உள்ள போகும்போது, சொல்ல ஆரம்பிக்கும்போதே பஸ்ஸரை அழுத்திடுங்க” என ஜாலியாக சொல்ல, அதைக்கேட்டு ஜனனி புன்னகைக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை