“THUG LIFE-னா?”.. GP முத்துவுக்கு விளக்கம் கொடுத்த போட்டியாளர்கள்.. விஷயம் தெரிஞ்சதும் அவரு பண்ணது தான் அல்டிமேட்!!
Thug Life பற்றி ஜிபி முத்து கேள்வி எழுப்பவும், அதற்கு அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் கொடுத்த விளக்கமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.
இதற்கு காரணம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் தான். இதனால், அடிக்கடி பிக்பாஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வலம் வருவதை நாம் பார்க்க முடியும்.
பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் பரபரவென ஜிபி முத்து இயங்கிக் கொண்டே வருவதுடன் மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக ஜிபி முத்து வைத்துக் கொள்கிறார். அந்த வகையில், “Thug Life” என்ற வார்த்தையை அசீம் சொல்கிறார். இதனைக் கேட்ட ஜிபி முத்து, அப்படி என்றால் என்ன என கேட்கிறார்.
முதலில், “நீங்கள் தான் Thug Life” என மகேஸ்வரி ஜிபி முத்துவிடம், இதற்கான விளக்கத்தை அசீம் கொடுக்கிறார். “வந்த முதல் நாளிலேயே அனைவரையும் விரட்டி விரட்டி அடிச்சாருல, அதுனால பிக்பாஸ் தான் Thug Life தலைவர். நீங்க என்ன பேசினாலும் அதற்கு பிக்பாஸ் கவுண்டர் வைத்திருப்பார்” என கூறுகிறார்.
இதன் பின்னர், Thug Life மீம்ஸ் வீடியோக்களில் வரும் கண்ணாடி மற்றும் செயின் குறித்து மகேஸ்வரி தெளிவாக சொல்ல ஜிபி முத்துவிற்கும் புரிந்து விடுகிறது. அப்படிப்பட்ட வீடியோக்களை நிறைய பார்த்துள்ளேன் என குறிப்பிட்ட ஜிபி முத்து, அதில் வரும் மியூசிக் போட்டு நடனமாடவும் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் நீங்கள் தான் தலைவரே Thug Life என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை