மர்மத் தீவான பருத்தித்தீவு..! நடமாடும் இனம் தெரியாதோர் – வெளியாகியுள்ள எச்சரிக்கை
பருத்தித்தீவு
யாழ்.பருத்தித்தீவு கடற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதனை கடற்றொழிலாளார்களாலேயே அறிய முடியாதுள்ளது என்றும் அனைத்தும் மர்மமாக உள்ளது என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளார் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 3 இடங்களில் சீன இராணுவத்தினர் சிவில் உடையில் நடமாடுவதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடற்தொழில் அமைப்புடன் கலந்துரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரிடம் தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பருத்தித்தீவில் கடல் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நிற்பவர்கள் யார் ?
ஆனால் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இது யாருடைய பண்ணை ? பிரதேச செயலகம் அனுமதி வழங்கவில்லை என்றால் யார் இதற்கு அனுமதி வழங்கியது ? அங்கு நிற்பவர்கள் யார் ? எனவும் கேள்வி எழுப்பினார்.
யாழ். குடா இயற்கையாவே இறால், கடல் அட்டை, மற்றும் மீன் இனங்கள் இனம்பெருகும் இடமாகவே உள்ளது.
எமது கடல் எமக்கு சொந்தம்
ஆக செயற்கையாக கடல் அட்டை பண்ணை அமைப்பதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் எமது கடல் எமக்கு சொந்தம் என்றும் இந்தியாகவே இருந்தாலும் சீனவாக இருந்தாலும் கடல் அட்டை என்ற போர்வையில் எமது வளங்களை சுரண்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை