சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஜோதிகா
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
கருத்துக்களேதுமில்லை