அட்லி இயக்கத்தில் விஜய் 68-காசை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்?

தளபதி 68 படத்தின் மெர்சலான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.தளபதி 68 படத்தை அட்லி இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. விஜய்-அட்லி கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்யும் அட்லியும் 4-வது முறையாக இணைந்து பட்டையைக் கிளப்ப போகின்றனர்.

தளபதி 68 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தளபதி 68 படத்தை தயாரிக்கப் போகிறது. இதற்காக முன்கூட்டியே அட்வான்ஸ் தொகையையும் விஜய்க்கு கொடுத்திருக்கிறது.
எனவே இந்த கூட்டணி உறுதியான நிலையில் விஜய் மற்றும் அட்லி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அட்லியும் பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கி, அந்த படத்திற்கான வேலையை விரைவில் துவங்க இருக்கிறார்.
மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஏற்கனவே ஜனத கரேஜ், புஷ்பா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள். தற்போது முதல் முதலாக விஜய்யின் படத்தை தயாரித்து நல்ல லாபம் பார்க்க காத்திருக்கின்றனர். ஆகையால் தளபதி 68 படத்தின் பட்ஜெட் நிச்சயம் 500 கோடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.