‘லங்கன் ஃபெஸ்ட்’ மெல்போர்னில் மீண்டும் ஆரம்பம்.
இலங்கையின் கலாசார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ 2022 ஒக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
‘லங்கன் ஃபெஸ்ட்’ என்பது இலங்கையின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் இலங்கையின் தனித்துவமான அனுபவத்தை இது வழங்குகிறது.
‘லங்கான் ஃபெஸ்ட் 2022’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) மெல்போர்னில் உள்ள குயின் விக்டோரியா சந்தையில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
கருத்துக்களேதுமில்லை