உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டு அரிசியைக் கலந்து விற்கும் மாஃபியாக்கள்

நாட்டில் தற்போது அரிசி தேவையான அளவு உள்ளதாகவும் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாஃபியாக்கள் செயற்பட்டு வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘நாட்டில் தற்போது தேவைக்கு அதிகமாக அரிசி உள்ளது. கடந்த காலங்களில் அதிகளவான அரிசித் தொகை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சில நெல் ஆலை உரிமையாளர்கள் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து சந்தைக்கு விநியோகம் செய்கின்றனர். இது எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் உள்நாட்டு நெல்லின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் அரிசி 200 ரூபா முதல் 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் சில நெல் ஆலை உரிமையாளர்கள் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியைக் கலந்து விற்பனை செய்கிறார்கள். ஆகையால் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.