முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென மற்றுமொரு அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய இருவர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே குறித்த அழைப்பாணையை விடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் சாட்சிப்பதிவுக்காக கோட்டாப்ய ராஜபக்ஷவை நீதிமன்றத்திற்கு அழைக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதால் சாட்சியமளிக்க அழைக்க முடியாதென குறித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் குறித்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக அறிவித்து, கோட்டாப்ய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயரிட்டு மீள அழைப்பாணை விடுக்குமாறு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே உரிய அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கோட்டாப்ய ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணியொருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அதனடிப்படையில் மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு அறிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.