இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழினுட்பம் இலங்கையின் வடபகுதியில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார்.

எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தினை கொண்டு வருவதனை வடக்கு கடற்றொழிலாளர்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (18) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் மன்னார் ஓலைத்தடுவாயில் அமைந்துள்ள கடலட்டை உற்பத்தி நிலையத்திற்கு இந்திய முதலீட்டாளர் வருகை தந்து இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நுட்பத்தை முதலீடு செய்ய இருப்பதாக அறியும் செய்தி எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த செய்தியினால் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவரை இதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்துமாறும் யாழ். கடற்தொழிற்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.