பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றிவளைப்பு..
பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர் .
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தளம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆராச்சிக்கட்டுவ புருதகலே பகுதியில் வைத்து இந்த சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றி வளைக்கப்பட்டது.
அங்கு 213 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 6595 லீற்றர் கோடா மற்றும் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான ரூபன் வன குடு லாலின் பிரதான சீடர்கள் இருவர், கிரிபத்கொட ஹுனுபிட்டிய வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 106 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை