போதைப்பொருட்களுடன் யாழ் இளைஞர்கள் மூவர் கைது!
மூன்று இளைஞர்கள்
யாழ்ப்பாணம் மெல்லங்கம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையிப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை