அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் சிறப்புப் பிரகடனத்தில் கையெழுத்திடும்
தேர்தல் திருத்தங்களை கொண்டு வருவோம் என்று கூறி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற குழு மண்டபம் எண் 8ல் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது .
இதில் ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், புதிய இலங்கை சுதந்திரக் கட்சி. உட்பட மேலும் பல அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளன
கருத்துக்களேதுமில்லை