22A இற்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி வாக்களிக்கும்: மைத்திரி
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆதரவளிக்கவில்லை . அரசாங்கத்தை வலுப்படுத்தவே திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதால்தான் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம்,” என்றார்.
22A ஜனநாயகம், பொது சேவை மற்றும் ஊழல் நிறைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை