கோட்டா ஆரம்பித்ததை அரசு மூடுகிறது!

கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்” என்ற பெயரில் இலங்கை வங்கியின் கூட்டாண்மைக் கிளையில் பராமரிக்கப்படும் 85737373 என்ற உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு அக்டோபர் 18, 2022க்குப் பிறகு செயற்படாது என கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியபத்திரன தெரிவித்துள்ளார். .

எனவே, நன்கொடையாளர்கள் அக்கணக்கில் பணத்தை வைப்புச் செய்ய வேண்டாம் என்றும், அந்தக் கணக்கில் வரவு வைப்பதற்காக காசோலைகள் மற்றும் பணத்தை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியபத்திரன, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது தீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் வெற்றிக்காக நன்கொடையாளர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.

கொவிட் நிதிக்காக நன்கொடையாளர்களிடமிருந்து ரூபாய் இருநூற்று இரண்டு கோடியே  எழுபத்தொரு இலட்சத்து அறுபத்து நாலாயிரத்து எழுநூற்று எண்பத்து ஐந்து (ரூ. 2,207,164,785.58) பெறப்பட்டுள்ளது.

PCR பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தேசிய தடுப்பூசி திட்டம், கட்டில்கள் வாங்குதல், மருந்துகள் ஆகியவற்றுக்காக நூற்று தொண்ணூற்று ஒன்பது கோடியே எழுபத்தைந்து இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு (ரூ. 1,997,569,456.56). செலவழிக்கப்பட்டுள்ளது .

அக்டோபர் 18, 2022 நிலவரப்படி, கொவிட் நிதியில் எஞ்சியிருக்கும் பணம் இருபத்தொரு கோடியே அறுபத்து எட்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று முப்பத்தைந்து ரூபாய்கள் (ரூ. 216877431.05) ஆகும், இது ஜனதிபதி நிதியத்தில் வரவு வைக்கப்படும் . இத்தொகை மருத்துவ உதவிகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.