அம்பலாங்கொடையை உலுக்கிய சம்பவம்!

அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர்.

குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை காப்பாற்றியதாகவும், மற்ற இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் நேற்று (19) மாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றைய மாணவியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.