நமீபியா -ஐ.அரபு எமிரேட்ஸ் இடையிலான போட்டி ஆரம்பம்
இன்று, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசி 12 அணிகளுக்குள் தகுதி பெறும் மற்றொரு போட்டி நடைபெறுகிறது.
இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நமீபியா இடையே நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டொஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் நமீபியா வெற்றி பெற்றால், போட்டியின் பிரதான சுற்றுக்கு நமீபியா தகுதி பெறும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி பெற்றால், நெதர்லாந்து அணி இறுதி 12 சுற்றுக்குத் தகுதி பெறும்.
கருத்துக்களேதுமில்லை