மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற பெண் முதலை தாக்கி பலி

கதிர்காமம் – செல்லகதிர்காமம் பகுதியிலுள்ள மாணிக்க கங்கையின் மேல் பகுதியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.

செல்லக்திர்காமம் – கொஹொம்பதிகான பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(19) மதியம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றிருந்த நிலையில், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடினமான பிரயத்தனத்திற்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.