பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை!
சேதனைப்பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய இராஜாங்க அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
சேதன பசளை பாவனையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கு நிதியை திறைசேரிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.
எனினும் நிதி திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.<
நேற்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்ரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த பதிலை வழங்கினார்.
கருத்துக்களேதுமில்லை