பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் இராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்று லிஸ் டிரஸ் இராஜினாமா செய்திருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை  இந்திய வம்சாவளியான அந்நாட்டின் உள்துறை அமைச்சர் வெல்லா பிரேவர்மென் (42) நேற்று தனது பதவியை இராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.