டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 20) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி

இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 59 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 11 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பவுண்ட்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம் | Dollar To Lkr Dollar Rate Today Exchange Rates Sl

 

இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 417 ரூபா 48 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 401 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளது.

 

அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 13 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 349 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.