கோப் குழுவில் இருந்து விலகினார் சாணக்கியன்!
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சாணக்கியன் ராசமாணிக்கம் தொடர்ந்தும் கோப் குழு உறுப்பினராக செயற்படுவார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை