விரிவுரையாளர்களால் அரசுக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!
நூற்றி எண்பத்தொன்பது பல்கலைக்கழக விரிவுரையாளர்களை முதுகலைப் பட்டப் படிப்பிலிருந்து இடைநிறுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் தொண்ணூற்று மூன்று கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2457 விரிவுரையாளர்கள் தெரிவு
கடந்த இரண்டாயிரத்து பத்திலிருந்து இன்றுவரை இரண்டாயிரத்து நானூற்று ஐம்பத்தேழு விரிவுரையாளர்கள் கலாநிதிப் பட்டப் படிப்புகளை கற்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களில் ஒரு குழுவினர் பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்களுக்கான முதுகலை பட்டப்படிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ஆயிரத்து நூறு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
முதுநிலைப் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பட்டியலை அமைச்சர் பேரவையில் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை முதுகலை பட்டபடிப்பை தொடரவிடாமல் இடையில் நிறுத்தியதன் மூலம் அரசாங்கம் பாரிய பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை