வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்!
அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை நீக்கும் பணியை மேற்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இவ்வாண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி இலங்கை 1,465 பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியது.
அதன்பின்னர் பல முறையீடுகளை பரிசீலித்து 708 தயாரிப்புகள் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இறக்குமதியாளர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை