நான் சனிக்கிழமை கெளம்பிடுவேன், இங்க இருக்குறது”.. GP முத்து எடுத்த முடிவு.. வார இறுதியில் நடக்க போவது என்ன??
தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் அதிகமாக உள்ளது.
இதனிடையே, சமீபத்தில் அசல் கோலார் மற்றும் தனலட்சுமி இடையே வாக்குவாதமும் பெரிய அளவில் உருவாகி பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, விக்ரமன், அசீம், ADK, ஜிபி முத்து ஆகியோரிடையே நடந்த உரையாடல் கூட அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே வேளையில், சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் விளங்கி வரும் ஜிபி முத்து, சக போட்டியாளர்களிடம் கூட மிக அன்பாக அவர் பழகி வருகிறார். அப்படி இருக்கையில், குடும்பத்தை நினைத்து மனம் வருந்தி வெளியேறுவதாகவும் கூறி இருந்தார். தொடர்ந்து, போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ஆகியோர் அறிவுறுத்திய பின்னர், மீண்டும் முன்பு போல இயங்கி வருகிறார்.
ஆனாலும், மீண்டும் வெளியே போக வேண்டும் என்றும் ஜிபி முத்து தொடர்ந்து கூறி வந்தது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. தான் வீட்டிற்கு போக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்து வரும் ஜிபி முத்து, நான் சனிக்கிழமை போய் விடுவேன் என்றும் பிக்பாஸ் கிட்ட சொல்லிட்டேன் என்றும் என்னால் இங்க இருக்க முடியாது என்றும் அசீமிடம் பேசி உள்ளார். மேலும், இங்கு Waste ஆக இருந்து அடுத்தவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஜிபி முத்து இருக்க வேண்டும் என பார்வையாளர்கள் பலரும் கருதி வரும் நிலையில், என்ன நடக்க போகிறது என்பது வார இறுதியில் கமல் வரும் போது தான் தெரியும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை