ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு விலகும் நிலா…! ஏற்படவுள்ள ஆபத்துகள்

பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஏற்படும் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு விலகும் நிலா...! ஏற்படவுள்ள ஆபத்துகள் | Earth And Moon Distance

பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலா தோன்றிய போது 14 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் விலகிச்சென்றுள்ளதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.