25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!
1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது.
இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ராயல் மின்ட் ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50p (pence) நாணயங்களை வெளியிட உள்ளது. இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனம், “ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்லாது, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய மன்னர் சார்லஸ்-III ஆகியோரின் உருவப்படங்களும் இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை