கனடாவில் 36 வயதான பெண் எங்கே? காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

கனடாவில் காணாமல் போன 36 வயது பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Manitoba பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் டொரீன் ஹெட் என்ற 36 வயதான பெண் புதன்கிழமை மதியத்தில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளதோடு அப்பெண்ணின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். டொரீன் 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் 119 பவுண்டுகள் எடை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 36 வயதான பெண் எங்கே? காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்கள் | Rcmp Searching For Missing Women

டொரீன் கருப்பு நிற தலைமுடி மற்றும் பழுப்பு நிற கண்கள் உடையவர் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொண்டு கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.