சீரற்ற காலநிலை: 4,900க்கு மேற்பட்டோர் பாதிப்பு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை