T20 உலகக்கிண்ணம்: சுப்பர்-12 சுற்றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் Devon Conway 92 ஓட்டங்களையும் Finn Allen 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் Josh Hazlewood 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
201 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா, 17.1 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் Mitchell Santner மற்றும் Tim Southee ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் Trent Boult 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக Devon Conway தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை